சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓவியா நடிக்கும் "கிளிக்" -யார் யார் நடிக்கின்றனர் தெரியுமா ?
1795653006000
ஜேஆர்பி இண்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் சார்பில் ராஜாபிரபு தயாரிக்க, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் எண்டர்டெயினர் படம், ‘கிளிக்’. ஓவியா, ராஜாபிரபு ஆகியோருடன் சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் நடிக்கின்றனர். தமிழில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓவியா நடிக்கும் படம் இது. அருண் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜோசப் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
சையத் ஜாஃபர் நிர்வாக தயாரிப்பு பொறுப்பு ஏற்றுள்ளார். ஜென்-ஸீக்கான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படம், உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு கலகலப்பான திரை அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

