ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘ஆஃபீஸ்’ சீரிஸின் ரிலீஸ் அப்டேட்

office

ஜெகன்நாத் தயாரிப்பில் கபீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ‘ஆஃபீஸ்’. இந்த சீரிஸில் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்  ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன்  அரவிந்த், பிராங்க்ஸ்டர்  ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.    

 


இந்த ஆஃபீஸ்  சீரிஸின் கதை,  ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் டைட்டில் டிராக், புரோமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

Share this story