'ஓ மை காட்' .. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தம்
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் ஓ மை காட் என பதிலளித்து சென்றுள்ளார்.வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்த நிலையில், படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, நடிகர் ரஜினிகாந்த்திற்கும் அமீர்கானுக்குமான காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக கிளம்பினார்.
ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்தும் அதில் 7 பேர் சிக்கி உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ரஜினிகாந்த், எப்போ நடந்தது எனக் கேள்வி கேட்டு விவரங்களை பெற்றார். பின் ஓ மை காட்.. ஸாரி என பதலளித்த ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அவரது ரசிகர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.