வரவேற்பை பெறும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்...!
Tue Apr 01 2025 10:32:51 AM

நடிகர் விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸ் ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் பழிவாங்கும் தொடராக உருவாகியுள்ளது.
ஜெகநாத் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரில் விமல், புகழ், குயின்சி ஸ்டான்லி, கஞ்சா கருப்பு, மகேஸ்வரி சாணக்யன், பவ்னி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த வெப் தொடர் கடந்த வாரம் மார்ச் 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியானது முதல் இன்று வரை பார்வையாளர்களால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் நடிகர் விமல் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இந்த ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்கு நல்ல லாபகரமான வெப் தொடராக அமைந்துள்ளது.