ஓணம் ஸ்பெஷல் : மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்
நடிகை அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால், சிந்து சமவெளி, மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இதில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அதன்பின் சில படங்களில் தோன்றிய அமலாபால் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரது திருமணமும் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அமலா பால் பதிவிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து , கடந்த ஜூன் 11ஆம் தேதி குழ்ந்தை பிறந்ததாகவும், ஆண் குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாகவும் அமலாபால் - ஜெகத் தேசாய் ஜோடி தெரிவித்தனர். இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அமலாபால் - ஜெகத் தேசாய் தம்பதி வெளியிட்டுள்ளனர்.