மீண்டும் மீண்டும் ஒரே வேடத்தில் நடிக்கும் சசிகுமார் -எந்த வேடம் தெரியுமா ?
1751867217020
சமீபத்தில் வெளியாகி சசிகுமார், சிம்ரன் நடிப்பில் ஹிட்டான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது .மேலும் பல கோடி வசூலை அள்ளியது .இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாகும் .இந்த படத்தில் சசிகுமார் ஏற்று நடித்த இலங்கை தமிழர் வேடம் அவருக்கு மிக பொருத்தமாக இருந்தது .
இதையடுத்து சசிகுமார் நடித்திருக்கும் ‘பிரீடம்’ என்ற படத்தை ‘கழுகு’ சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லிஜோமோல் ஜோஸ், சதீஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ‘கேடி’ பேராசிரியர் மு.ராமசாமி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்த பிரீடம் படம் பற்றி சசிகுமார் கூறுகையில், ‘தற்போது மிகவும் வித்தியாசமான கதை மற்றும் கேரக்டர் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே நான் நடித்த ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் வரிசையில் ‘பிரீடம்’ படமும் மறக்க முடியாததாக இருக்கும். பல ஆண்டுக்கு முன் வேலூரிலுள்ள சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகள் பற்றிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இரண்டு படங்களிலும் இலங்கை தமிழராக நடித்துள்ளேன். இது தற்செயலாக நடந்த விஷயமாகும்’ என்றார்.