அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் நெருக்கமான காதலை கூறும் ஒன்ஸ் மோர் -பட விமர்சனம்
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கல்லூரி சீனியர் அர்ஜூன் தாஸை சந்திக்கிறார், அதிதி ஷங்கர். காதலிக்கவும் செய்கிறார். இதற்கு முன்பு சோனா ஒலிக்கலுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், காதல் என்றாலே வெறுக்கும் அர்ஜூன் தாஸ், என்ன செய்கிறார் என்பது மீதி கதை. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன், வழக்கமான குரலுடன் தனது கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கருடன் நெருக்கமான காதலிலும் ஸ்கோர் செய்துள்ளார். சோனா ஒலிக்கலுடன் எல்லையை மீறியுள்ளார். காதல் மொழி பேசும் அதிதி ஷங்கர், திடீரென்று மனம் மாறும் சோனா ஒலிக்கல் ஆகியோரின் கேரக்டர்கள் ஜென்-ஸீ ரசிகர்களை கவரும்.
காமெடி நடிகர் ஜென்சன் திவாகருக்கு பாதிரியார் கேரக்டர் பொருந்தவில்லை. டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், சவுந்தர்யா மனோகரன், ரக்ஷா செரின், காந்த், நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், ரமா, தேவதர்ஷினி சேத்தன், பூஜா சுரேந்தர் கச்சிதம். ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், எடிட்டர் நாஷ் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

