இணையத்தில் வைரலாகும் 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர்..!
நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள், சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது சுந்தர்.சி நடிப்பில் தயாராகும் 'ஒன் 2 ஒன்' படத்திலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.
'ஒன் 2 ஒன்' திரைப்படத்தை 24 ஹவர்ஸ் ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதோடு, இந்த படத்தில் சுந்தர்.சியுடன் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்திரா ஆகியோர் முக்கிய கேரக்டர்களிலும் ராகினி திவேதி, பேபி மானஸ்தி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் படக்குழுவினரால் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படமும் விரைவில் திரையரங்குக்கு வெளியாக உள்ளது.
இதோ இந்த படத்தின் ட்ரெய்லர்...