போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து... ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் !

rajini

 போதை பழகத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கஞ்சா பயன்பாடு என்பது சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. இதனால் இளைஞர் சமுதாயம் சீரழிந்துக் கொண்டே செல்கிறது. இந்த போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

rajini

அதேநேரம் பல்வேறு சமூக நல அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொங்கியுள்ளது. 

rajini

‘போதையற்ற தமிழ்நாடு’ என்ற முழக்கத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஹரீஷ் கல்யாண், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனும் போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்திட்டார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், போதை பழகத்திற்கு எதிரான தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து புகைப்படங்களை DYFI வெளியிட்டுள்ளது.  

 

Share this story