200 மில்லியன் பார்வையாளர்கள் கிளப்பில் இணைந்த அஜித்தின் இந்த பாடல்.

photo

அம்மா பற்றி பாடல்கள் ஒருபக்கம் ஸ்கோர் செய்தால், நாங்க என்ன சலச்கவங்களா….. என மற்றொரு புறம் அப்பா குறித்த பாடல்கள் ஸ்கோர் செய்கின்றன. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி டாட் லிட்டில் பிரின்சஸ்களை தேம்பி தேம்பி அழவைத்த பாடல்தான் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணான  கண்ணே….” பாடல்.

photo

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் எமோஷனல் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர். படம் 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.  இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

photo

தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணான  கண்ணே….” பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதற்கான போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த பாடலிற்கு தாமரை வரிகள் எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். டி.இமான்  இந்த பாடலிற்காக  முதல் முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story