அஸ்வத் மாரிமுத்துவின் ஒரே ஒரு விளம்பரம்.... நிரம்பி வழியும் இமெயில்..

ashwath

உதவி இயக்குனர் தேவை என்ற ஒரே ஒரு விளம்பரம் கொடுத்ததற்காக, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு 
15,000க்கும் மேற்பட்ட இமெயில்கள் வந்துள்ளன. 


பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ’டிராகன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இதனை அடுத்து, சிம்புவின் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார் என்பதும், அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான உதவி இயக்குனர்களை தேர்வு செய்ய, சமூக வலைதளங்களில் அஸ்வத் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்து, சுமார் 15,000 பேருக்கும் மேல் மின்னஞ்சல் மூலம் தங்களது ரெஸ்யூம்களை அனுப்பியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

"உதவி இயக்குனருக்கான விண்ணப்பத்தை அனுப்பும் கடைசி நாள் முடிந்துவிட்டது. இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். என் குழுவினர், உங்கள் ரெஸ்யூம்களை பார்த்து விரைவில் தேர்வு செய்யப் போகின்றனர்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்."முதலில் 10 உதவி இயக்குனர்களை மட்டுமே எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது, என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்ந்து மொத்தமாக 20 நபர்களை எடுக்க உள்ளேன். என்னை டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றும் பதிவிட்டுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

 

Share this story