எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான்.. சூர்யா பளிச்!

surya

கங்குவா படத்துக்காக சூர்யா மும்பை மற்றும் டெல்லி என வட இந்தியாவில் முகாமிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார் எல்லாம் செய்யாத அளவுக்கு தனது கங்குவா படத்துக்கான புரமோஷனை தீவிரமாக அனைத்து இடங்களிலும் செய்யும் முடிவில் உள்ள சூர்யா பாலிவுட்டை முதலில் குறி வைத்துள்ளார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், தேவி ஸ்ரீபிரசாத், சிறுத்தை சிவா மற்றும் ஞானவேல் ராஜா என ஒட்டுமொத்த கங்குவா டீமும் கலந்துக் கொண்டனர்.


அப்போது, செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் குறித்து எழுப்பிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். வேற யாருக்கும் அந்த பட்டத்தை தூக்கி கொடுக்க முடியாது என பேசியுள்ளார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா என சென்ற அந்த சூப்பர் ஸ்டார் பஞ்யாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் முடிவு கட்டினார். இந்நிலையில், சூர்யாவிடமும் அந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். வேறு யாருக்கும் அந்த பேட்ஜை கொடுக்க முடியாது என்றார்.  

 

Share this story