மகளை ஆசீர்வதித்து நடிகையாக்கிய ஊர்வசி -எந்த படம் தெரியுமா ?

நடிகை ஊர்வசியின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் .
நடிகை ஊர்வசி மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் பல வெற்றி படங்களில் காதநாயகியாக நடித்தவர் .இவர் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் வெள்ளி விழா கண்டது .இது போல பல மலையாள வெற்றி படங்களிலும் இவர் நடித்து பெயர் பெற்றார் .பின்னர் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிக்கு தேஜ லஷ்மி என்ற மகள் இருக்கிறார் .பின்னர் ஊர்வசி அவரை டைவர்ஸ் செய்து விட்டு ,சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தனது தாய் தந்தையரை போலவே திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் ஊர்வசியின் மகள் தேஜலக்ஷ்மி. ‘சுந்தரியாயவல் ஸ்டெல்லா’ என்கிற மலையாள படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சர்ஜனோ காலித் நடிக்க உள்ளார். சர்ஜனோ ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊர்வசி, மகள் நடிக்க இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த படத்தை நடிகை ஊர்வசி தயாரிக்கிறார் .தனது மகளை ஊர்வசி ஆசிர்வாதம் செய்து நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .