"டார்க்” படத்தின் "ஒரு ஸ்டெப் வெச்சா" பாடல் வெளியானது...!

dark

டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்”  படத்தின் "ஒரு ஸ்டெப் வெச்சா" பாடல் வெளியானது.

இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “டார்க்” . MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, கதை எழுதி இப்படத்தை தயாரிக்கிறார்.

 


 



அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் , இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் VTV கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார், அர்விந்த் ஜானகிராமன் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற  "ஒரு ஸ்டெப் வெச்சா" பாடல் வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். 


 

Share this story