சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு... அப்போ சிறந்த வில்லன் யார் தெரியுமா ?

osaka
 ஓசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டு ஓசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் எந்த திரைப்படம் சிறந்த படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

osaka

இந்த விருது பட்டிலில் சிறந்த திரைப்படமாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் விஜய் சிறந்த நடிகராகவும், சிறந்த வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

osaka

அதேபோல் சிறந்த நடிகையாக கங்கனா ரணாவத்தும், சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும், சிறந்த திரைக்கதையாசிரியராக வெங்கட் பிரபுவும், சிறந்த இயக்குனராக பா ரஞ்சித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.‌

 

Share this story