2025 ஆஸ்கர் : எந்தெந்த படங்கள் விருதை தட்டி சென்றன.. முழு லிஸ்ட் இதோ...

oscars


2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வென்றவர்களின் முழுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. 

அந்த வகையில் இந்தியாவில் இருந்து இந்தாண்டு பாலிவுட் படமான ‘லாபடா லேடீஸ்’(Laapataa Ladies) பரிந்துரைக்கப்பட்டது.  ஆனால் இப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் இந்தாண்டும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படம் வழக்கம் போல் வெளியேறியது. இருப்பினும் இந்தியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா’ என்ற குறும்படம் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் பிரிவில் நாமினேஷனில் இடம் பெற்றது.


இப்படத்தை மொத்தம் 10 பேர் தயாரித்துள்ள நிலையில் அதில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா உள்ளிட்டோரும் இருந்ததால் விருது பெறும் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்படம் விருது பெறவில்லை. இந்த விழாவில் விருது வென்ற படங்களின் முழு பட்டியல் இதோ.. 

சிறந்த திரைப்படம்: அனோரா 

சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா)

சிறந்த துணை நடிகர்: கியரென் குல்கின் ( ஏ ரியல் பெயின்)

சிறந்த துணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்)

சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா)

சிறந்த ஒளிப்பதிவாளர்: லோல் கிராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த அசல் திரைக்கதை: சீன் பேக்கர் (அனோரா)

சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ்

சிறந்த ஒரிஜினல் இசை: டேனியல் ப்ளூம்பெர்க்(தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த ஒலி: ட்யூன் 2

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2

சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர்

சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

சிறந்த படத்தொகுப்பு: அனோரா

சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்

சிறந்த அனிமேஷன் படம்: ஃப்ளோ

சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு: பால் டேஸ்வெல் (விக்கெட்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோட்


இதில் அதிக பட்சமாக ‘அனோரா’ படம் ஐந்து விருதுகளையும் ‘தி ப்ரூட்டலிஸ்ட்’ படம் மூன்று விருதுகளையும் ‘ட்யூன் 2’ படம் இரண்டு விருதுகளையும் வென்றுள்ளது.

 

Share this story