'விடாமுயற்சி' பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் களமிறங்கும் மற்ற படங்கள் ?

jayam ravi

அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி' திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் விடாமுயற்சி. 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இந்நிலையில், இன்று புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு கேம் சேஞ்சர், வணங்கான் ஆகிய படங்கள் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப் போன நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பால் காதலிக்க நேரமில்லை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள், ‘என்னை இழுக்குதடி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடித்துள்ள ’தருணம்’ திரைப்படமும் வரும் பொங்கள் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது.

Share this story