பேச்சி படத்தின் ஓடிடி அறிவிப்பு வெளியானது
1726827317000
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன். விஜய் டி.வியில் சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மக்களின் கவனத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தின் ஓடிடி குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது, திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்குகளில் காண தவறவிட்டவர்கள். ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.