அர்ஜூன் தாஸின் அநீதி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
1694686420252
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள அநீதி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் அநீதி. அதில், துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படம் கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

