பார்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பார்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்தப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கக்கூடிய பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்து அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். இத்திரைப்படம் வெளியான நாள் முதலே பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வந்தது. வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது.

பார்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், பார்க்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 30-ம் தேதி பார்க்கிங் படம் ஹாட்ஸாடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Share this story