சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைப்பு
1700555251515
நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் ‘சித்தா’ இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கலை இயக்கிய சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான இந்த படம் நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.11.5 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சித்தா திரைப்படம் நவம்பர் 17-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 28-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.