ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!
1747825830519

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ரெட்ரோ' . இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் தயாரித்தன. கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் உலக அளவில் 235 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் ரெட்ரோ படம் வருகிற ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.