மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் ஓடிடி அப்டேட்...!

நடிகை லாஸ்லியா நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த வாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நடிகையாக மாறினார். பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர், தற்போது யூடியூபர் ஹரி பாஸ்கருடன் புதிய படத்தில் நடித்துள்ளார். அருண் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இப்படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரயானும் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் மார்ச் 25 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.