‘பெருசு’ படத்தின் ஓடிடி அப்டேட்..

ott

 ‘பெருசு’ திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார்.மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’. இப்படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டை பட தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.


 
ஏப்ரல் 11-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘பெருசு’ படம் வெளியாகும் என்று படக்குழுவும் ஓடிடி தளமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் மட்டுமே வெளியாகும். இந்தியில் ரீமேக் உரிமை விற்கப்பட்டு இருப்பதால், இந்தியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story