சூப்பர் ஹிட் ஆன ‘டிராகன்’ படத்தின் ஓடிடி அப்டேட்...!

திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
Some dragons don’t breathe fire, because their comebacks are hotter 😎🧯
— Netflix India South (@Netflix_INSouth) March 18, 2025
Watch Dragon on Netflix, out 21 March in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #DragonOnNetflix pic.twitter.com/hFGn9tRTia
இப்படம் வெளியாகும் முன்னரே, ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையினை கைப்பற்றி இருந்தது. ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது மார்ச் 21-ம் தேதி ‘டிராகன்’ வெளியாகும் என்று ஃநெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.