மதுக்கோப்பையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஓவியா..!

Oviya


நடிகை ஓவியா தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். களவாணி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே அமைந்து வருகிறது. ஹோம்லி கேரக்டர்களில் இருந்து அதிரடியாக கவர்ச்சிக்கு மாறியதும் இவருக்கு கைக்கொடுக்கவில்லை.மதயானைக்கூட்டம், கலகலப்பு போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே மிகவும் அதிகமான புகழையும் ரசிகர்களையும் பெற்றார் ஓவியா. சமூக வலைதளங்களிலும் அதிரடியாக பல பதிவுகளை வெளியிட்டு வரும் இனியாவிற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் காணப்படுகின்றனர்.

oviya
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஓவியா. இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவை அனைத்துமே ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மது அருந்திவிட்டு, சைட்டிஷ்ஷையும் ஒரு வெட்டு வெட்டுகிறார் ஓவியா. இந்த புகைப்படத்தின் கேப்ஷனில் மது அருந்துவது உடல் நலனிற்கு தீங்கானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் தைரியமான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் ஓவியா. தன்னுடைய மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். இருந்தபோதிலும் இந்த அளவிற்காக தைரியமாக புகைப்படத்தை வெளியிடுவது என்று இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

oviya

Share this story