"ரசிகர்கள் இல்லை என்றால், பாடகர்கள் இல்லை" : பிரபல சினிமா பாடகி சுசீலா

ரசிகர்களின் கைதட்டும் உற்சாகமும் தான் எங்களை வழி நடத்துகிறது என பிரபல சினிமா பாடகி 89 வயதான பத்மஸ்ரீ சுசீலா சேலத்தில் நடைபெற்ற தனியார் இசை நிகழ்ச்சியில் மனமுருக உற்சாகமாக பேசினார்..... நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை கேட்டபோது , தற்போது தன்னால் முடியவில்லையே என ஏக்கத்துடன் கூறி, அந்த பாடலை பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார்......டி.எம்.சௌந்தரராஜன் தற்போது தன்னோடு இருந்தால் , இன்னும் பல பாடல்களைப் பாடுவேன் என ரசிகர்கள் மத்தியில் சுசீலா உற்சாகம் .....சேலத்தில் நடைபெற்ற தனியாரின் சேலம் இளங்கோ இசைக்குழுவின் 35 வது ஆண்டு விழாவில் , பிரபல சினிமா பின்னணி இசைப் பாடகி 89 வயதான பத்மஸ்ரீ சுசிலா கலந்து கொண்டு, மேடை இசைக்கலைஞர்களின் பாடல்களை கேட்டு ரசித்தார். பின்னர் இசை கலைஞர்களுடன் சேர்ந்து , அத்தான் என் அத்தான் அவன் என்னைத்தான், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே, ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி, என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் என்ற பாபடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
"கோடம்பாக்கம் தூங்குகிறது.. நல்ல இசை இல்ல.. பாடகர்கள் இல்ல" பரிதாபப்பட்டு பேசிய பி.சுசீலாhttps://t.co/6bb08RdmtZ#thanthitv
— Thanthi TV (@ThanthiTV) July 25, 2024
"கோடம்பாக்கம் தூங்குகிறது.. நல்ல இசை இல்ல.. பாடகர்கள் இல்ல" பரிதாபப்பட்டு பேசிய பி.சுசீலாhttps://t.co/6bb08RdmtZ#thanthitv
— Thanthi TV (@ThanthiTV) July 25, 2024
அப்போது ரசிகர்கள், நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை பாடும்படி விரும்பி கேட்டபோது , அது தன்னால் இப்பொழுது பாட முடியாதே என்ற ஏக்கத்துடன் கூறி , பின்னர் அப்பாடலை பாடிய அவர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களை தற்போது இங்கு வர சொல்லுங்கள் நான் இன்னும் பல பாடல்களைப் பாடுவேன் என்று ரசிகர்களிடம் கனத்த குரலில் குழந்தை தனமாக பேசினார். மேலும் தனக்கு குரல் மாறிவிட்டதாகவும், வயசானாலும் இசைக்காக தான், நான் எங்கும் செல்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் இல்லை என்றால் பாடகர்கள் இல்லை என்றும் ரசிகர்களின் கைதட்டலும் , உற்சாகமும் தான் எங்களை வழி நடத்துகிறது என்ற அவர் , டி்எம்.சௌந்தர்ராஜன் மகன் செல்வகுமாரை அழைத்து , அவருடன் ஒரு பாடலை பாடினார்.
தொடர்ந்து தனது இசை பயணத்தின் சில நிகழ்வுகளை பகிர்ந்த சுசிலா அவர்கள் , அந்த கால பாடல்கள் இனி எப்போதும் வராது என வேதனையுடன் தெரிவித்தார்.