மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. பாடகி பி.சுசீலா வெளியிட்ட வீடியோ..!

P sushela

பழம்பெரும் பிரபல பாடகியான பி.சுசீலா சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 88 வயதான பாடகி பி.சுசீலா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


பி.சுசீலா, 5 முறை தேசிய விருது, பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் பி.சுசீலா வயது முதிர்வு மற்றும் உடல் நலப் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று (ஆக.19) உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பாடகி பி.சுசீலா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "தமிழ் ரசிகர்களுக்கு பாடல்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதனால் கடவுள் என்னை காப்பாற்றியுள்ளார். கடவுள் எனக்கு ஏன் இவ்வளவு நல்ல குரலை கொடுத்துள்ளார் என இப்போது தெரிந்தது. கடவுளை நம்பினால் கைவிடுவதில்லை. எனக்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Share this story