பீப் பிரியாணி கேட்டதால் 'விக்ரமன்' தோற்கடிக்கப்பட்டாரா? – செய்தியாளர் கேள்விக்கு 'இயக்குநர் பா.ரஞ்சித்' பதில்.

பிக்பாஸ் சீசன் 6 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முடிவிற்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அசீம் இந்த சீசனின் வின்னராக தேர்வுசெய்யப்பட்டார். அதே போல விக்ரமன் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பல லட்சம் பேர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த பொங்கலை முன்னிட்டு பிக்பாஸ் ஃபைனலிஸ்டுகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது, அதற்காக ஒவ்வெருவரும் கேமரா முன்பு தனக்கு பிடித்த உணவுகளை கூறினர். அதன்படி விக்ரமன் கேமரா முன் சென்று தனக்கு ஒரு பீப் பிரியாணி, ரைத்தா, பிரட் அல்வா போன்றவை வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இந்த வீடியோ வெளியாகி ஒரு புறம் ஆதரவும், மற்றொரு புறம் மாட்டுக்கறி என்பது ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்ட உணவு அதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது ஒருவேலை பிக்பாஸ் வீடு மூலமாக விக்ரமன் அரசியல் செய்கிறாரா? என்றும் பல விவாதங்கள் எழுந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது, அதாவது “பிக்பாஸ்ஸில் விக்ரமன் பொங்கலுக்கு மாட்டுக்கறி கேட்டதால்தான் விக்ரமன் வெற்றிபெறவில்லையா” என கேட்கப்பட்டது, இதற்கு விளக்கமளித்த பா. ரஞ்சித் “எனக்கு பிக்பாஸ் பற்றி எதுவும் தெரியாது. நான் மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுகிறேன், நான் இன்னும் "வெற்றிகரமாக" தான் இருக்கிறேன்.” என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.