நடிகர் தனுஷுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு..!

ranjith

நடிகர் தனுஷ் இயக்கியும் நடித்தும் வெளிவந்த படம் ராயன். இந்த படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தார்.இந்த படம் A சான்றிதழ் பெற்று திரைக்கு வந்த முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.தன் தம்பி தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்பங்களுடன் உருவான இந்த படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், ராயன் படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், தனுஷை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்களின் 50வது படத்தில் உங்கள் நடிப்பும் இயக்கமும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், துஷாரா விஜயனையும் ரஞ்சித் பாராட்டியுள்ளார். 
 


 

Share this story