பா. ரஞ்சித்தின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்....!

pa ranjith

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த திரைப்படமான வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. 


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

pa ranjith

 இவர்  கடைசியாக சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

arya
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் காரைக்குடியில் தொடங்கியுள்ளது. படத்தை குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Share this story

News Hub