பா ரஞ்சித்தின் அடுத்த பட தலைப்பு ‘ப்ளு ஸ்டார்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

blue star

பா ரஞ்சித் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  

பிரபல இயக்குனராக பா ரஞ்சித் தனது நீலம் பிரொடக்ஷன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இளம் நடிகர் அசோக் செல்வனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.  இந்தபடத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கி வருகிறார். 

blue star

இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சாந்தனு பாக்கியராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழழகன் ஒளிப்பதிவு ​செய்யும் இப்படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்து வருகிறார். லெமன் லீஃப் கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

கிரிக்கெட்டை மையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நண்பர்களின் நட்பினை கொண்டாடும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அரக்கோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் மோஷன் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஃப்ளூ ஸ்டார்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story