'பாட்டல் ராதா' படம்: இரண்டாவது பாடலின் ரிலீஸ் அப்டேட்
குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார்.ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Reminiscing into your deepest emotions with the 2nd single from #BottleRadha ❤️
— Think Music (@thinkmusicindia) November 19, 2024
Releasing on Thursday, 21st November 2024 ✨#BottleRadhaFromDec20 🍾
A @RSeanRoldan Musical@beemji @officialneelam @balloonpicturez #ArunBalaji @Dhinakaranyoji @gurusoms @sanchana_n… pic.twitter.com/otD5RrSsIr
மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த கதையில் இப்படம் உருவாகி உள்ளது.இதற்கிடையில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 21-ந் தேதி இப்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.