`படைத்தலைவன்' பட ரிலீஸ் தேதி மாற்றம்... என்ன காரணம் தெரியுமா...?

விஜயகாந்த் மகன் நடித்துள்ள `படைத்தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்றது. ஆனால் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கிட்டதட்ட 10 கோடி ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் `படைத்தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.