‘படையாண்ட மாவீரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

கௌதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
‘கனவே கலையாதே’ , ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கௌதமன் . இவர் தற்போது வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.
ஒரு மாவீரனின் பெருவரலாறு!
— Nikil Murukan (@onlynikil) May 30, 2025
Presenting the Official Trailer of #PadaiYaandaMaaVeeraa! https://t.co/c2t0q81SN5 #PadaiYaandaMaaVeeraaTrailer #படையாண்டமாவீரா
இசை - @gvprakash
பின்னணி இசை - @SamCSmusic@gowthaman_va @Nirmalraajha #VKProductionGroup #Poojitha @Vairamuthu… pic.twitter.com/0WS9kE22Me
ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ‘படையாண்ட மாவீரா’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.