‘ஆவேஷம் 2’ படம் எப்போது ?-பகத் பாசில் தகவல்
1771291854000
மலையாளத்தில் கடந்த 2024ம் ஆண்டு பஹத் பாசில், மிதுன் ஜெய்சங்கர், ரோஷன் ஷாநவாஸ் நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘ஆவேஷம்’. ஜித்து மாதவன் இயக்கிய இது, கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் அமோக வரவேற்பு பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர். இந்நிலையில் பஹத் பாசில் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘ஆவேஷம் 2’ படத்துக்கான பணிகள் வரும் 2027 அல்லது 2028ல் தொடங்கும்’ என்றார். சூர்யா நடிக்கும் 47வது படத்தை ஜித்து மாதவன் இயக்குகிறார். அதை முடித்த பிறகு ‘ஆவேஷம் 2’ படத்தை அவர் இயக்குகிறார். இதுநாள் வரை ‘ஆவேஷம் 2’ பற்றி மர்மமாக இருந்து வந்தது. அதை இப்போது பஹத் பாசில் உடைத்துள்ளார்.

