ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?
ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கேக்கு வாக்கு’ இசை வீடியோ வெளியாகியுள்ளது. அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார்.
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும், ‘பிரேமலு’ படத்தின் மூலம் விநியோகத் துறையில் வெற்றி பெற்ற எஸ்.எஸ். கார்த்திகேயாவின் ஷோயிங் பிசினஸும் இணைந்திருப்பதால் இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
கால பைரவா இசையமைத்துள்ள ‘கேக்கு வாக்கு’ பாடல், படத்தின் நாயகன் சூரியின் வித்தியாசமான குணத்தையும் அவரது துணிச்சலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கால பைரவா மற்றும் வாசி இணைந்து பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளதுடன், இருவரும் பாடலையும் பாடியுள்ளனர். ஃபஹத் பாசிலின் உற்சாகமான நடன அசைவுகள், சாராவின் பங்களிப்பு மற்றும் கால பைரவாவின் துள்ளலான இசை ஆகியவை இசை வீடியோவின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.
டீசரைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த முதல் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

