பிரபல இயக்குனர் படத்தில் பகத் பாசில் -எந்த இயக்குனர் தெரியுமா ?

Fagath fasil

பிரபல நடிகர் பகத் பாசில் மலையாள படவுலகிலிருந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .இவர் நடித்த புஷ்பா படம் வசூலில் சக்கை போடு போட்டது .அடுத்து தமிழில் மாமன்னன் மற்றும் மாரீசன் போன்ற வெற்றி படங்களால் இவர் முன்னணி நடிகரானார் .இப்போது அவர் ஒரு முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
'96' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். '96' படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் பிரேம்குமார் அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் இணைய உள்ளார். இது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறியுள்ள பிரேம்குமார்,கதை தொடர்பாக ஃபஹத் பாசிலிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியதாகவும், இந்த கதை ஃபஹத் பாசிலுக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் .
இது நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.
இதனிடையே, இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

Share this story