"எங்களுக்குள் சண்டை, சச்சரவு எப்போதும் வந்ததில்லை."-நஸ்ரியா பற்றி பகத் பாசில்

fahad fazil trance

கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் எங்கேனும் ஓடிப்போக நினைப்பதாகவும் சோஷியல் மீடியாவில் பகீர் தகவலை வெளியிட்டார் நஸ்ரியா. கணவர் பஹத் பாசிலுடன் அவருக்கு பிரச்னை என்றும் இருவரும் பிரியப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. தற்போது சென்னை வந்த பஹத் பாசில் இது குறித்து பேசும்போது, ‘‘குழந்தைகளைக் கையாளுவதிலும், அவர்களிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் எனக்கு அதிகத் திறமை இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அதற்கு நான், ‘என் வீட்டில் ஏற்கனவே ஒரு குழந்தை (நஸ்ரியா) இருக்கிறது. அதைத்தான் நான் சமாளித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறுவேன். ஆனால், எங்களுக்குள் சண்டை, சச்சரவு எப்போதும் வந்ததில்லை. சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்’’ என்றார்.

Share this story