"கமல்ஹாசன் என்னுடன் நகைச்சுவையாக பேசுவார்" -இப்படி சொன்ன நடிகர் யார் தெரியுமா ?
கமல்ஹாசனுடன் பகத் பாசில் ''விக்ரம்'' படத்தில் நடித்திருந்தார் அவர் இப்போது வடிவேலுடன் இனைந்து மாரீசன் படத்தில் நடித்துள்ளார் .மேலும் இதற்கு முன்பு அவர் மாமன்னன் ,புஷ்பா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் .பகத் பாசில் நடித்த புஷ்பா இரண்டு பாகமும் வசூலில் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது
கமல்ஹாசனை சந்திக்கும்போது ஒருபோதும் சினிமாவைப் பற்றிப் பேசுவதில்லை என்றும், நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம் என்றும் பகத் கூறி இருக்கிறார்.
பகத் பாசில், வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள ''மாரீசன்'' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகி அப்போது கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து பகத் பாசில் பகிர்ந்து கொண்டார்
அவர் கூறுகையில், "கமல் சாரும் நானும் சந்திக்கும் போது, இரண்டு, மூன்று மணி நேரம் நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம்.சினிமாவுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அது பெரும்பாலும் எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியது" என்றார்

