‘பனையூர் பிரியாணி’ -இன்னிக்கு ஒரு புடி; இணையத்தை கலக்கும் விஜயின் விருந்து புகைப்படம்.

photo

விஜய் ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் தற்பொழுது டுவிட்டரில்பனையூர் பிரியாணி’ என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

photo

கோலிவுட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார் விஜய்ஆனால் இந்த நிகழ்வு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடக்காமல் இருந்தது.

photo

இந்த நிலையில் இன்று சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திக்கிறார்  என்றும், இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் கேட்டு தெரிந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

photo

இதற்காக காலை முதலே நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு அலைபோல் திரண்டு வந்தனர்.  விஜய் தன்னை காண வந்துள்ள ரசிகர்களுக்காக சுட சுட பிரியாணி விருந்தும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

photo

இந்தநிலையில் ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி  வரும் நிலையில், டுவிட்டரில்பனையூர் பிரியாணி’ என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

 

 

Share this story