பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால்.. மீண்டும் இணையும் ‘கதகளி’ கூட்டணி !
பாண்டியராஜ் இயகத்தில் விஷால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பசங்க’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜ். முதல் படமே நல்ல ஓபனிங் தர அடுத்து வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கோலிசோடா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் விஷாலை வைத்து இயக்குனர் பாண்டியராஜ், புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். ‘கதகளி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை முடித்து பாண்டியராஜ் படத்தில் விஷால் இணையலாம் என தெரிகிறது.