“அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்!......”- மனம் நொந்த இயக்குநர் ‘பாண்டிராஜ்’.

photo

நடிகனாக கோடான கோடி ரசிகர்களை சம்பாதித்த விஜய்காந்த், அரசியலுக்கு தாவி அங்கும் தனக்கான இடத்தை பிடித்தார். ஒரு நல்ல மனிதனாக பேர், புகழை தாண்டி தனக்கான மக்களை சம்பாதித்த அந்த மகாமனிதர் கடந்த  சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், அரசியலிலிருந்து ஓய்வெடுத்து அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார்.  சமீபத்தில் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய்காந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இந்த நிலையில் இன்று நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் சிகிச்சைக்கு பிறகு  தொண்டர்களை சந்தித்த அவர், நாற்காலியில் சரியாக உட்காரக்கூட முடியாமல் கஷ்டப்பட்டார். இதனை பார்த்த தொண்டர்கள் கண்கலங்கினர். அந்த வீடியோவை பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரைஅவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ... பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படி பார்க்க ரொம்பவே  கஷ்ட்டமா இருக்கு” என பதிவிட்டுள்ளார்.

Share this story