பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் டீசர் அப்டேட்...!

vjs

பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்”, ’நம்ம வீட்டு பிள்ளை', ’எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் விஜய் சேதுபதி, நித்யா மேனன்,  யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து புதிய படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.



இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், டைட்டில் டீசர் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜேஎஸ் 52 படத்தின் டைட்டில் டீசர் வரும் 3ம் தேதியான நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share this story