தமிழில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய `பணி' திரைப்படம்

pani
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'பணி'. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் படம் குறித்து பாராட்டி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இப்படத்தை நடிகர் சூர்யா, அனுராக் காஷ்யப், சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பலர் பாராட்டினர். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் நடித்துள்ளனர்.pani இப்படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்துள்ளனர். இந்த நிலையில், 'பணி' தமிழாக்கத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் மற்றும் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ், நாயகி அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள். திரைப்படம் தமிழில் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. kamalஇந்நிலையில் படக்குழு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்பொழுது எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியாகியுள்ளது.   கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 மற்றும் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள தக் லைஃப் படத்திலும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story