"பறந்து போ" படத்தின் முதல் பாடல் வெளியீடு

sun flower

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 

"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராம். எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர்.  இவர் தற்போது ’பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ’பறந்து போ' படத்தில் இடம்பெற்றுள்ள "சன் பிளவர்" பாடல் வெளியாகியுள்ளது.

Share this story