மிர்ச்சி சிவா நடிக்கும் பறந்து போ படத்தின் டீசர் -ரசிகர்களிடையே வரவேற்பு

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கி உள்ளார்.இதன் டீசர் சமீபத்தில் வெளியானது .
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இதன் முதல் சிங்கிள் ‘சன்ஃப்ளவர்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்காக சூரியகாந்தி தோட்டத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளார் . இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ராம் தன்னுடைய செவன் ஹில்ஸ் செவன் சீஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளார். இந்நிலையில் டீசர் அண்மையில் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறும்பு செய்யும் மகன், அதை சமாளிக்கும் தந்தை என இந்த ‘பறந்து போ’ படத்தின் டீசர் அமைந்துள்ளது.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்த்துள்ளார் .இப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற நாம் வாழ்த்துவோம்