இயக்குனர் பாலாவை பாதித்த "பறந்து போ"- பார்வையாளர்களை கவர்ந்த ட்ரைலர் .

இயக்குனர் ராம் இயக்கி நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் பறந்து போ படத்தின் ட்ரைலெர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது .இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாலாவின் பேச்சு அனைவரின் மனதை தொட்டது .
பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக்.
விழாவில் பேசிய பாலா, "ராமை எல்லோரும் பாராட்டிவிட்டார்கள். நான் தனியாக பாராட்ட வேண்டியதில்லை. படம் பார்த்துவிட்டு வருகிறேன். என்னை ரொம்ப பாதித்திருக்கிறது. படம் பார்த்து முடித்ததும் ராம் என் அருகில் இருந்தாலும் மாரி செல்வராஜைத்தான் நான் கூப்பிட்டு இந்தப் படம் ஒழுங்காக ரிலீஸாக நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் என்றேன். ஏனென்றால் இதில் மாரி செல்வராஜ்தான் இயக்குநர் போல் ஓடியாடி வேலை செய்தார்.மேலும் இந்த படத்தை விமர்சகர்கள் நல்ல முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன் என்றார் .