அன்பெனும் பேராயுதம் தாங்கி வருகிறான் பராரி - டிரைலர் வெளியீடு
1731159340000
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக ஜோக்கர் மற்றும் குக்கூ திரைப்படங்கள் பார்க்கப்படுகிறது. இப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்பொழுது பராரி என்ற திரைப்படத்தை வழங்கியுள்ளார். பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். இவர் ராஜு முருகனின் உதவி இயக்குனராக இருந்தவராவார். இப்படத்தில் பெரும்பாலானோர் புதிய முக நடிகர்களாக அறிமுகமாகவுள்ளனர். படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சாம் மேற்கொண்டுள்ளார். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் கதை சூழல் தமிழ்நாடு மற்றும் கர்னாடகா பார்டரில் நடைபெறுகிறது. மொழி, ஜாதி, கலப்பு திருமணம் ஆகியவற்றை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.