’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’- பார்த்திபனின் புதிய படைப்பு குறித்த தலைப்பு வெளியீடு.

photo

தனது ஒரு ஒரு படைப்பிலும் வித்தியாசத்தையும், புதுமையையும் புகுத்தி ரசிகர்களுக்கு  விருந்து படைத்து வரும் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த தலைப்பு வெளியாகியுள்ளது.

photo

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ‘புதிய பாதை’ படத்தின் மூலமாக இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. தொடர்ந்து பொண்டாட்டி தேவை, தாலாட்டு படவா, பாரதி கண்ணம்மா, ஹவுஸ்ஃபுள், அழகி, காதல் கிறுக்கன், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட படைகளில் நடித்தும் சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். அதிலும் பாரதிபட கடைசியாக இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற் பொருமையை பெற்றுள்ளது.

photo

அந்த வகையில் தற்போது பார்த்திபனின் புது வரவாக ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் புது திரைப்படம் தயாராக உள்ளது. படத்தின் தலைப்பை அறிவித்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் ஒரு பெண் ஜாக்கிங் போவது போலும் அவரை பின் தொடர்ந்து ஒரு வயதான மனிதர் செல்வது போலும் காட்சி இருக்கிறது. இந்த படத்தை அகிரா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கின்றனர். தொடர்ந்து படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு, படத்தின் கதைக்களம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story